தமிழ்நாடு

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

31st Aug 2022 01:38 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் எழுந்தருளியுள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞா கணபதி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆக்ஞாகணபதி.

இதேபோல் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள சதுர்வேத விநாயகர், காசிவிசுவநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர், சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள தும்பிக்கையாழ்வார், கீழத்தெரு முருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர், மேலராஜவீதியில் எழுந்தருளியுள்ள விநாயகர், வெண்ணாற்றங்கரை, கோரையாற்றங்கரை விநாயகர், லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் கோயிலிலிருந்து தமிழ் இளைஞர் பக்தர் கழகம் சார்பில் 29-ம் ஆண்டு விசுவரூப விநாயகர் ஊர்வலம் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.  

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT