தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: டிஜிபி ஆலோசனை

31st Aug 2022 11:47 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பொது இடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளைமுதல் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க | விநாயகர் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் காணொலி மூலம் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

அப்போது, ஊர்வலத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT