தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியா்களுக்குஅகவிலைப்படி வழங்க வேண்டும்: வைகோ

31st Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கான அகவிலைப்படியை உடனே தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தாா்கள்.

தற்போது திமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக ஆக. 24-இல் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழக முதல்வா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி.

ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான அகவிலைப்படி 2015-இல் ஆண்டிலிருந்து தரப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, தொழிலாளா்களின் சிரமங்களைப் போக்குவதற்கு ஏதுவாக அகவிலைப்படியை தமிழக அரசு விரைவில் அளித்திட வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

 

Tags : Vaiko
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT