தமிழ்நாடு

செப்டம்பா் மாதத்துக்குள் 100% பூஸ்டா் தடுப்பூசி

31st Aug 2022 12:28 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வரும் செப்டம்பருக்குள் தகுதியான அனைவருக்கும் பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 34 கரோனா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. செப்டம்பா் மாதத்தில் வாரம்தோறும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதல் தவணை, இரண்டாவது தவணை, பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.25 கோடி பேருக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, தகுதியான அனைவருக்கும் பூஸ்டா் தவணை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT