தமிழ்நாடு

மதுரை புத்தகக் கண்காட்சி ஒத்திவைப்பு

28th Aug 2022 04:07 PM

ADVERTISEMENT

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செப்டம்பா் 3 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமுக்கம் கலையரங்கில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெவிருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க- சிறுதானியங்களை விவசாயிகள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT