தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ ஆதரவு

27th Aug 2022 07:22 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஆர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க- சிபிஐ சோதனையில் என்ன கிடைத்ததென்று சொல்லுங்கள்? ஆம் ஆத்மி போராட்டம்

எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐயப்பன், என்னைப் போன்று மற்ற எம்எல்ஏக்களும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைவார்கள் என்றார்.

ADVERTISEMENT

அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 61 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 4 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT