தமிழ்நாடு

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

27th Aug 2022 04:21 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபை புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மணலியை சேர்ந்த இளைஞரை காவல் துறை கைது செய்துள்ளது.

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபை புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபை புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி வழியாக மர்ம நபர் தகவல் தெரிவித்துள்ளார்.

துபை செல்லும் இண்டிகோ விமானத்தில் 174 பயணிகள் பயணிக்கவிருந்தனர். வெடிகுண்டு மிரட்டலால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது

ADVERTISEMENT

இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த  தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில், மணலியை சேர்ந்த நபர் என்று தெரியவந்தது.

இதையடுத்து, மணலியை சேர்ந்த இளைஞரை காவல் துறை கைது செய்தனர். இளைஞரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்னை காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிய வந்ததுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீா்: 5 நாள்களில் 13 முறை நிலநடுக்கம்- பொதுமக்கள் பீதி

இதனால் துபை விமானம் 3 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு புறப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT