தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 534 பேருக்கு கரோனா 

27th Aug 2022 09:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 534 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,66,635-ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க- ஓணம் பண்டிகை: செப்.8-ல் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

அதிகபட்சமாக சென்னையில் 87 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 74, ஈரோட்டில் 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,034 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

இன்று ஒரு நாளில் மட்டும் 602 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,23,262-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,339 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT