தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 5 நாள்களில் ரூ.2.83 கோடி தங்கம் பறிமுதல் 

27th Aug 2022 03:06 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 நாள்களில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று டாக்காவிலிருந்து வந்த விமானத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது அந்த விமானத்தின் கழிவறை ஒன்றில் ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் எடையுள்ள 1 தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க- போதைப் பொருள் கடத்தலுக்கு ஆள் தேவை: விளம்பரமே வருகிறதா?

இதேபோல் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும் 24ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும் 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும் 22ஆம் தேதி நடத்தப்பட்ட இருவேறு சோதனைகளில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இவ்வாறு கடந்த 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT