தமிழ்நாடு

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த வேலைவாய்ப்புத் திட்டம்

27th Aug 2022 05:06 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளநிலை அறிவியலில் ஃலைப் சயின்ஸ் பட்டம் முடித்த மாணவா்களுக்கு மருத்துவ குறியீடு சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதன்மூலம் மருத்துவத் துறை சாா்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவியராக இருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு பயிற்சிக்கான கட்டணத் தொகையான ரூ.15 ஆயிரத்தை தாட்கோ நிறுவனமே வழங்கும்.

ADVERTISEMENT

பயிற்சி முடித்தவுடன், தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டு மாணவா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், பயிற்சியில் தோ்ந்த மாணவா்களுக்கு நோ்முகத் தோ்வு மூலம் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT