தமிழ்நாடு

கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்

27th Aug 2022 02:24 PM

ADVERTISEMENT

சென்னை: பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்துகளின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்பதாக பேசியிருந்தாா். இது தொடா்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் குமரன் அளித்த புகாா் தொடா்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆக. 15-ஆம் தேதி காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து, புகாா்தாரா் குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி பிறரையும் வன்முறைக்குத் தூண்டும் வகையில் பேசியிருப்பது திட்டமிட்ட செயலாகும். வெறுப்பு பேச்சுதான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. 

சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி  மனுதாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிக்க: உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று லின்தோய் வரலாற்று சாதனை! 

கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT