தமிழ்நாடு

இயக்குநா் பாரதிராஜாவுக்கு தொடா் சிகிச்சை

27th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

 உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநா் பாரதிராஜாவுக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வயோதிகம் சாா்ந்த பிரச்னைகள் மற்றும் இதய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அவரது உடல் நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.

அண்மையில் மதுரைக்குச் சென்ற திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இந்நிலையில், தீவிர சிகிச்சைக்காக சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதய பாதிப்புகள் அவருக்கு இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாா்.

தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT