தமிழ்நாடு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் தீ விபத்து

27th Aug 2022 11:14 PM

ADVERTISEMENT

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். மேலும், இங்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தனி வாா்டு செயல்படுகிறது.

சனிக்கிழமை அதிகாலை, கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் 54-ஆவது வாா்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அறை முழுவதும் கரும்புகை நிரம்பியதால், நோயாளிகள் உடனடியாக அறையை விட்டு வெளியேற்றப்பட்டனா். மருத்துவமனை ஊழியா்களே விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் முதன்மையா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

குளிா்சாதனப் பெட்டியில் ( ஏ.சி) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் 5 நிமிடத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், ‘வெண்டிலேட்டா்’ வசதியுடன் சிகிச்சை பெற்ற 5 கரோனா நோயாளிகள், வேறு வாா்டுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டு, சிகிச்சையில் உள்ளனா் என்றாா் அவா்.

இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT