தமிழ்நாடு

ஆக.29இல் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்

26th Aug 2022 07:58 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ராகுல்காந்தி முதிர்ச்சியற்றவர்: அசாம் முதல்வர்

இந்தக் கூட்டத்தில் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT