தமிழ்நாடு

கடலூரில் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம்

26th Aug 2022 11:18 AM

ADVERTISEMENT

 

கடலூர்: கண்தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்ட நிர்வாகம், மருத்துவத் துறை சார்பில் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க | எடப்பாடி பகுதியில் திடீர் கனமழை: நெல், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம்

ADVERTISEMENT

இதற்காக அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் சுமார் 150 பேர் காலை சுமார் 8.30 மணிக்கு பேரணிக்காக நிறுத்தப்பட்டனர். காலை 9.45 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைக்க வந்திருந்தார். அப்போது ஒருவர் பின் ஒருவராக 3 மாணவிகள் மயங்கி சரிந்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைக்க பேரணி பாரதி சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனையை அடைந்தது.

இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகளில் மாணவ-மாணவிகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டும் மாணாக்கர்களை ஈடுபடுத்துவது தொடரதான் செய்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT