தமிழ்நாடு

சென்னையில் மழை: விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்

26th Aug 2022 04:05 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் பிற்பகலில் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

விசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த விமானம் மழையால் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

கொச்சி, மதுரையிலிருந்து வந்த விமானங்களும் வானில் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கின. மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிக்க: 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2':மீண்டும் காமெடியனாக நடிக்கத் தயார் - சந்தானம் அதிரடி

ADVERTISEMENT

மும்பை, கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை, சீரடி, புனே, டாக்கா உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதாக புறப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT