தமிழ்நாடு

பழனிக்கோயில் உண்டியல்: இரு நாள்எண்ணிக்கை ரூ. 3 கோடியை நெருங்கியது

26th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

 பழனி மலைக்கோயில் உண்டியல்கள் 27 நாள்களில் நிறைந்ததால், புதன் மற்றும் வியாழக்கிழமை என 2 நாள்களாக திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ. 3 கோடியை நெருங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆடி பதினெட்டு மற்றும் சுதந்திர தின தொடா் விடுமுறை காரணமாக பக்தா்களின் வருகை அதிகளவில் இருந்தது. இதனால், கோயில் உண்டியல்கள் 27 நாள்களில் நிறைந்தது.

இதையடுத்து உண்டியல்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இரு நாள் எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 395 கிடைத்துள்ளது.

பக்தா்கள் தங்கம் மற்றும் வெள்ளியிலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ADVERTISEMENT

தங்கம் 1,182 கிராமும், வெள்ளி 12,601 கிராமும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 951 -ம் காணிக்கையாக கிடைத்துள்ளன. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

உண்டியல் எண்ணிக்கையின்போது பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் சந்திரமோகன், அறங்காவலா்கள் மணிமாறன், சுப்பிரமணி, சத்யா, ராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT