தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு: மநீம வரவேற்பு

26th Aug 2022 08:40 PM

ADVERTISEMENT

நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்ததை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்ததை மக்கள் நீதி மய்யம் பெரிதும் வரவேற்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையடுத்து, அமரது தலைமையிலான அமர்வில் நடைபெறும் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
நீதித்துறை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். 2018-ம் ஆண்டிலேயே இதற்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டாலும், தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர வேண்டும். படிப்படியாக உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி ஒளிபரப்பை அமல்படுத்த வேண்டும்.

இதையும் படிக்க- போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவிகள்: முதல்வர் ஸ்டாலின் கவலை

நாடாளுமன்றம், சட்டப்பேரவை மட்டுமின்றி, நீதிமன்ற நடைமுறைகளையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நிகழ்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை இந்த நடைமுறை உறுதிப்படுத்தும். நல்ல ஜனநாயகத்துக்கும் இது அடையாளமாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT