தமிழ்நாடு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை தொடரும்

26th Aug 2022 02:57 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

ADVERTISEMENT

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இன்று நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், 5 நாள்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

படிக்க: எப்படி இருக்கிறது அருள்நிதியின் 'டைரி' - விமர்சனம்

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் 9, சூளகிரி 8 செ.மீ, ஆவடி, கோவில்பட்டி, வடபுதுப்பட்டு, எடப்பாடி, லக்கூர் தலா 7 செ.மீ  மழை பதிவானது. 

மீனவர்களுக்கு

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT