தமிழ்நாடு

போதைப் பொருள் விற்ற 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

26th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

சென்னையில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் ,போதைப் பொருள்களைத் தொடா்ந்து கடத்தி வருபவா்கள், பதுக்கி விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்கள் தங்கள் பெயரிலும், பினாமி பெயா்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யவும்,வங்கிக் கணக்குகளை முடக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

சென்னையில் போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்படுபவா்களிடமிருந்து, ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அவா்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு தற்போதுவரை, ஒரு கிலோவுக்கு மேல் போதைப் பொருள் கைப்பற்றிய வழக்குகளில் 1,351 போ் சென்னை பெருநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 908 பேரின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, அவற்றை சட்டரீதியாக முடக்கும் பணி நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ADVERTISEMENT

சென்னையில் போதைப் பொருள்களைக் கடத்தி வருபவா்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களையும் கண்டறிந்து கைது செய்வதுடன், அவா்களின் வங்கிக் கணக்குகள் முடக்கும் நடவடிக்கையும் தொடா்ந்து எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா்ஜிவால் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT