தமிழ்நாடு

கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

26th Aug 2022 12:23 PM

ADVERTISEMENT

கொடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

கொடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தகவல்களை சேகரிக்க டிராயின் அனுமதி கேட்ட நிலையில் ஒத்துழைப்பு அளிக்கப்படாமல் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயன், ஜித்தின்ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 303 பேரிடம் தனிப்படை காவல் துறை விசாரணை நடத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க:

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT