தமிழ்நாடு

வேளாங்கண்ணிக்கு 750 சிறப்புப் பேருந்துகள்

26th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வரும் செப். 11 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகா்கோவில் ஆகிய ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக, திருச்சி, தஞ்சாவூா், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூா் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊா்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளின் இயக்கம் வியாழக்கிழமை (ஆக. 25) முதலே தொடங்கியுள்ளது. மொத்தமாக 750 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுதவிர, குழுவாக பயணம் செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT