தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை: புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

22nd Aug 2022 11:55 AM

ADVERTISEMENT

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எவ்விதமான உதவித் தொகையும் பெறாத, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு, மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றார். 

ADVERTISEMENT

அதுபோல, இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

இதையும் படிக்க | புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT