தமிழ்நாடு

தனியார் பால் விலைகள் உயர்வு எதிரொலி: ஆவின் பால் தேவை அதிகரிப்பு

22nd Aug 2022 02:36 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலைகள் உயர்ந்ததன் எதிரொலியாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஆவின் பாலின் தேவை அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் விற்பனையான ஆவின் பாலின் அளவை விட 50 ஆயிரம் லிட்டர் பால் தற்போது அதிகமாக விற்பனையாகிறதாம். இதில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் அதிகமாக விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்: மிகப்பெரிய சதி கண்டுபிடிப்பு

தற்போது தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் விற்பனை செய்யும் பாலின் அளவு சுமார் 30 ஆயிரம் லிட்டரை எட்டவிருக்கிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. வாட்ஸ்-ஆப் அட்மின்களுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம்

தனியார் பால் விலை உயர்வால், இதுவரை தனியார் பாலை வாங்கி வந்த தேநீர் மற்றும் உணவகங்கள் கூட ஆவின் பாலை வாங்கத் தொடங்கிவிட்டன. தனியார் பால் ஒரு லிட்டர் 60 ரூபாயாக இருக்கும் போது, ஆவின் பால் ரூ.40 முதல் ரூ.51 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில நூறுகள் முதல் சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆவின் பாலை வாங்கத் தொடங்கிவிட்டனர் தேநீர் மற்றும் உணவக உரிமையாளர்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT