தமிழ்நாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு விழா: ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் அழைப்பு

22nd Aug 2022 04:48 PM

ADVERTISEMENT

திருச்சி:  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  75-வது ஆண்டு விழாவிற்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை சந்தித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  75-வது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சனிக்கிழமை(ஆகஸ்ட் 20) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத் துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோர் சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது முதல்வரிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்ததாவது:-

தேசநேச திருப்பயணம் மேற்கொண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பயணம் முடித்து தமிழ்நாட்டுப் பயணத்தை தொடக்கமாக வருகிற செப்டம்பர் 2-ந் தேதி சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதே நாளில் தென்மாநில முதல்வர் மாநாட்டில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு 2 தமிழக அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதல்வர் இசைவு தந்துள்ளார். 

இதையும் படிக்க: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு: ஷுப்மன் கில் சதம்!

மேலும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லா தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர், எல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT