தமிழ்நாடு

அர்ச்சகர் நியமனம்: அரசு விதிகள் செல்லும்

22nd Aug 2022 11:20 AM

ADVERTISEMENT

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய விதிகள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம், பணி நிபந்தனை தொடர்பாக அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020-ல் கொண்டு வரப்பட்டன. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கலாம். ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என புதிய விதிகளில் உள்ளன.

இதையும் படிக்க- பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்; 11 பேர் கைது

இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், தனி நபர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய விதிகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை கண்டறிய 5 பேர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT