முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
இதையும் படிக்க | எங்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு தார்மீக உரிமை இல்லை: கே.பி.முனுசாமி
இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை தற்போது தயாராகி வருவதாகவும் விரைவில் தமிழக அரசிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.