தமிழ்நாடு

கம்பம் மெத்தைக் கடையில் தீ விபத்து: ரூ. 2.50 மதிப்பிலான பொருள்கள் சேதம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் மெத்தைக் கடை தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூபாய் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீப்பிடித்து எரிந்து கருகியது.

தேனி மாவட்டம் கம்பம் புலவர் தெருவைச் சேர்ந்தவர் நிஜாம் கான் மகன் முகமது ஆசிக் (29). இவர் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் மெத்தைக் கடை மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டுச் சென்றார்.

நள்ளிரவில் அவரது கடையில் கரும்புகை வெளியானது. ரோந்து சென்ற கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, கடை உரிமையாளர் முகமது ஆசிக்கிற்கும் தகவல் தெரிவித்தனர்.

கடையில் தலையணை, மெத்தை போன்ற பஞ்சுப் பொருள்கள்  இருந்ததால் விரைவாக தீப்பிடித்து எரிந்து கருகியது. மேலும், செல்போன் போன்ற உதிரி பாகங்களும் கருகின.

மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீப்பிடித்து எரிந்த பொருள்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT