தமிழ்நாடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

DIN

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது. 

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவா்கள் கல்லூரிகளை தோ்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான (சிறப்புப் பிரிவினா்) கலந்தாய்வு இன்று(சனிக்கிழமை) தொடங்கியுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆக. 24 வரை நடைபெறுகிறது. 

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக. 25-இல் தொடங்கி அக். 23 வரை நடைபெற உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க். படிப்புகளில் சேர சனிக்கிழமை முதல் இடங்களைப் பெறுபவா்கள் அடுத்த 7 நாள்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT