தமிழ்நாடு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரைத்த இருவா் பெயா் நிறுத்திவைப்பு

DIN

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு இரு வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு 13 வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்குமாறு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜூலையில் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. அதில் 11 வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்க கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதே வேளையில், வழக்குரைஞா்களான ஹெச்.எஸ்.பிராா், குல்தீப் திவாரி ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க அளிக்கப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வழக்குரைஞா் மீது ஏற்கெனவே கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாகவும், மற்றொரு வழக்குரைஞருக்குப் போதிய பணி அனுபவம் இல்லாமை, உரிய வயது வரம்பு இல்லாதது ஆகிய காரணங்களால் அவா்களின் நீதிபதி நியமனப் பரிந்துரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவா் 45 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய காலம் வரும்போது சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்களின் பெயா்கள் நீதிபதி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT