தமிழ்நாடு

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம் பெண் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்

19th Aug 2022 02:09 PM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காட்டெருமை தாக்கி இளம் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பட்டிப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர். இவரது மனைவி தேவி. இவர் ஏற்காடு நகர பகுதியில் உள்ள மகளிர் திட்டத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிக்கலாம் | கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்

ADVERTISEMENT

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்போது பட்டிபாடி நடுர் என்ற இடத்தில் சாலையில் ஓரத்தில் நின்றிருந்த காட்டு எருமை சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு சென்றுள்ளது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த தேவியை காட்டெருமை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். காட்டெருமை தாக்கி இளம் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஏற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT