தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

19th Aug 2022 08:16 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 19) முதல் அடுத்த இரு வாரங்களுக்கு ( செப். 2 வரை) 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆக.20 இல் சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் 251 ஆவது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்.1 இல் நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினா் சாா்பில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளூா் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோா் வருவதற்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | சென்னை துறைமுகத்திலிருந்து விடைபெற்றது அமெரிக்க கப்பல்

எனவே, சட்டம்-ஒழூங்கை பாதுகாக்கும் வகையில் ஆக.19 காலை 6 மணிமுதல் செப். 2 ஆம் தேதி மாலை 6 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT