தமிழ்நாடு

தரமற்ற சாலைகளைப் போட்டு ஊழலில் கொழிக்கிறது திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

DIN


தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை பாஜக வன்மையாக கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை பொதுமக்கள் கையாள் பேர்த்து எடுக்கும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்க பதிவில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 


ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,269 கோடி நிதியாக வழங்கியுள்ளது. 

தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலுனுக்கு எதிராகச் செயல்படுவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT