தமிழ்நாடு

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: 9 இடங்களில் நகைகள் மீட்பு

19th Aug 2022 04:50 PM

ADVERTISEMENT

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இதையும் படிக்க- சிறைகள்தோறும் வகுப்பறைகள்: மாநில அரசின் புது முயற்சி

தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன என்றும் கோயம்பேடு, குரோம்பேட்டை, கோவை உள்பட 9 இடங்களில் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT