தமிழ்நாடு

ஆவினில் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம்

19th Aug 2022 06:53 PM

ADVERTISEMENT

ஆவின் நிறுவனத்தின் பத்து புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட பத்து புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ‘ஆவின்’ வணிக பெயரில் பல்வேறு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனையை மேற்கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனம், வளர்ந்து வரும் நுகர்வோரின் தேவைக்கேற்ப பல புதிய பால் பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. ஆவின் ஏற்கெனவே, 215 வகையான பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோர்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச்-2022-இல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் அறிவிப்பில் தெரிவித்த கீழ்கண்ட 10 புதிய
பால் உபபொருட்களும் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு
அறிமுகப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர்.ந.சுப்பையன் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களையும்,
மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை 24X7 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : aavin
ADVERTISEMENT
ADVERTISEMENT