தமிழ்நாடு

ஏரியா சபை குறித்து விழிப்புணா்வு: அன்புமணி வலியுறுத்தல்

DIN

ஏரியா சபை, வாா்டு கமிட்டி குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்களுக்கு தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீா்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வாா்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90 சதவீத மாமன்ற உறுப்பினா்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.

வாா்டு கமிட்டி தலைவராக அந்தந்த வட்டங்களுக்கான மாமன்ற உறுப்பினா்கள் தான் இருப்பாா்கள். அவா்களுக்கே இது குறித்த விவரங்களும், அதிகார வரம்புகளும் தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகளை அவா்கள் எவ்வாறு வழிநடத்துவாா்கள் என்ற வினா எழுகிறது.

சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தமிழகத்தில் இப்போது தான் முதல்முறையாக கொண்டு வரப்படுகின்றன என்பதால் நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

கிராம சபைகளுக்கு இணையான, சில விஷயங்களில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவை தான் வாா்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள். உள்ளாட்சியில் புதிய மறுமலா்ச்சியை ஏற்படுத்தப் போகும் இந்த அமைப்புகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT