தமிழ்நாடு

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை: பழனிவேல் தியாகராஜன் பேச்சு

18th Aug 2022 01:24 PM

ADVERTISEMENT

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என மதுரையில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட மத்திய தொகுதிக்குள்பட்ட  எஸ்.எஸ்.காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். 

முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:  

இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | நீதியின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது: பில்கிஸ் பானு

தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என பழனிவேல் தியாகராஜன் கூறினார். 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர்,  மாநகராட்சி துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT