தமிழ்நாடு

ஓபிஎஸ்ஸுடன் இணைய முடியாது: இபிஎஸ்

DIN

சென்னை: ஓபிஎஸ்ஸுடன் இணைய முடியாது  என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர். அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம்.

பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.

பொதுச்செயலாளருக்கு சமமாக இரட்டைப் பதவிகள் கொண்டுவந்து சட்டவிதிகள் திருத்தப்பட்டன.  பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. 2663 பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தேர்தல்  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒற்றைத் தலைமை வேண்டுமென அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரெளவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தாக்கச் செய்தார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ். அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம். 2017-ல் மீண்டும் இணைந்தோம்

பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓபிஎஸ், ஏன் நீதிமன்றங்களை நாடிச் செல்கிறார். ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை.கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி செயல்பட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ், மனக்கசப்புகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT