தமிழ்நாடு

தொடரும்...: மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம்

18th Aug 2022 02:25 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டதால் சாலையின் நடுவே உள்ள எட்டு மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கை - பம்பப்படையூர் மற்றும் தென்னூர் - பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தி நேராக அமைக்கும் வகையில் சாலை பணி சமீபத்தில் நடைபெற்றது. இதில், தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் இருந்த 8 மின்கம்பங்களை அகற்றாமல்  சாலை விரிவாக்க பணி முடித்ததுள்ளது.

இதனால்  புதிதாக விரிவாக்க செய்யப்பட்ட சாலையின் நடுவில் 8 மின்கம்பங்கள் உள்ளது. இப்பகுதியில் தான் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர்  இச்சாலை வழியே செல்ல வேண்டிய நிலை உள்ளதால், விபத்துகள் ஏற்படும் முன்னரே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை சாலை ஓரம் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே இப்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சமீப நாள்களாக ஆங்காங்கே, இருசக்கர வாகனத்தை வைத்திருக்கும் போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடப்பட்டது. அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போட்ட சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்  மின்கம்பங்களை அகற்றாமல் சாலைகள் போடப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT