தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

18th Aug 2022 09:20 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

இதையும் படிக்கலாம் | குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ADVERTISEMENT

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியில் இருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக இருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT