தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.88 குறைந்தது!

18th Aug 2022 10:29 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 88 குறைந்துள்ளது.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. 

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கும், கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849-க்கு விற்பனையானது. 

வியாழக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 12 ஆம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.39,120 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.62.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 62,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT