தமிழ்நாடு

பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு

18th Aug 2022 11:05 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்  என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிக்க | ‘அன்புச் சகோதரர் இபிஎஸ்’: ஓபிஎஸ் அழைப்பு

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன்பு இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனுவை இன்று வழங்கினர். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT