தமிழ்நாடு

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி

18th Aug 2022 09:46 PM

ADVERTISEMENT

பெரியாா் சிலை குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி, சென்னை மதுரவாயலில் கடந்த ஆக. 1-இல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரேயுள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் எனப் பேசியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

இதையும் படிக்க | 

இதுதொடர்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழக நிா்வாகி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் மீது சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கனல்கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதி புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனா். கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT