தமிழ்நாடு

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து நகைகள் மீட்பு

DIN

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைகள் கொள்ளையில் அமல்ராஜூக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

தனிப்படையினா் கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி,செந்தில்குமரன் ஆகிய 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த முருகனின் நெருங்கிய கூட்டாளியான வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சூா்யா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT