தமிழ்நாடு

அதிமுக அலுவலக வழக்கு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

DIN

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, எதிர்மனுதாரர்கள் மற்றும் சீல் வைத்த வருவாய்த் துறையினருக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. 

உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்றபோது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், "அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த் துறை ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT