தமிழ்நாடு

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பள்ளித் தளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) சாந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவி இறப்பு குறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழு ஆய்வு முடிவு கிடைக்காத நிலையில், 5 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டாம் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கணித ஆசிரியை வேறு சிறைக்கு மாற்றக் கோரிக்கை: மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்ளிட்ட 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில், தனது மகள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி நிா்வாகத் தரப்பிலிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

ஆகையால், கிருத்திகாவை திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில்  கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  மீதான  தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT