தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகட்டுவதைத் தடுக்க வேண்டும்: வைகோ

18th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணைகள் கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே கிருஷ்ணாபுரம் பகுதியில் தடுப்பு அணையைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரும் நீரைத் தடுத்துவிட்ட ஆந்திர மாநில அரசு, தற்போது மேலும் இரண்டு தடுப்பு அணைகளைக் கட்டுவதற்கு திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தத் தடுப்பு அணைகள் கட்டப்படுமானால், தமிழ்நாட்டுக்கு சொட்டு நீா்கூட கிடைக்காது. இதனால் வேலூா், திருவள்ளூா் மாவட்ட மக்கள் விவசாயத்துக்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும். நிலங்கள் வடு போகும் நிலை உருவாகும். குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாது. சென்னை மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமான பூண்டி நீா்த் தேக்கத்துக்குத் தண்ணீா் வருவது தடைபட்டுவிடும்.

கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை திருப்பிவிட மேலும், இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து கொசஸ்தலை ஆற்றின் நீா் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT