தமிழ்நாடு

‘நீட் விலக்கு, கல்விக் கொள்கை குறித்து பிரதமரிடம் கோரிக்கை’: முதல்வர் ஸ்டாலின்

DIN

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை குறித்து கோரிக்கை அளிக்கவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக சார்பிலான பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பதவியேற்பு விழாவிற்கு அழைத்தும் நேரில் வர முடியாததால் தற்போது நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.

இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்கவுள்ளேன். 180 நாடுகள் கலந்துகொண்ட செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கவுள்ளேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசவுள்ளேன். நீட் விலக்கு, புதிய கல்விக் கொள்கை, காவிரி, மேக்கேதாட்டு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்துவேன் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT