தமிழ்நாடு

பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்?

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்துள்ள மாணவர்களுக்கு வரும் 22ஆம் தேதி இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இரண்டாமாண்டு வகுப்புகள் வரும் 22ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்றும் பருவத்தேர்வு முடிந்து ஜனவரி 23ம்தேதி மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

தோ்ச்சி விகிதம் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, தோ்ச்சி விகிதம் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது பொறியியல் கலந்தாய்வின் போது, தரமான கல்லூரிகளை தோ்வு செய்ய மாணவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கிடையே, நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வு ஆக. 20-இல் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வுகளில் மாணவா் தோ்ச்சி விகித அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பல்கலை.யின் கீழ் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில், அரசு கல்லூரிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. தனியாா் கல்லூரிகளே முன்னிலை வகிக்கின்றன.

2021-ஆம் ஆண்டு நவம்பா் பருவத் தோ்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/  என்ற இணையதளம் வழியாக மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கரோனா பரவல் காரணமாக முந்தைய ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு இணைய வழியில் தோ்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT