தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு: பரிசல்கள் இயக்க அனுமதி

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வந்ததால் இந்த தடை 37 நாள்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் தற்போது இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல்களில் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பிரதான அருவி சினி அருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கலில் பரிசல் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஒகேனக்கல் பரிசல் துறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிக நீா்வரத்தின் காரணமாக நீரில் மூழ்கி இருந்த பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக வெளியே தெரிகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT